search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செக்ஸ் புகார்"

    ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள செக்ஸ் புகார் குறித்து நாளை போலீஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க உள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார்.

    ஒரே பிரிவில் இருந்ததால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு. நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் ஐ.ஜி. தொடர்ந்து பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடிபணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தெரிகிறது. அதாவது அந்த பெண் சூப்பிரண்டிடம் “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது தனக்கு ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்று டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக காவல்துறையின் விசாக கமிட்டி நாளை (வியாழக்கிழமை) கூட உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பகம் கட்டிடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த செக்ஸ் புகார் குறித்து விசாரணை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணைகள் நடந்து முடிந்து விட்டன. எனவே நாளைய தினம் விசாரணையின் அடுத்தக் கட்டம் தொடங்கப்பட உள்ளது.

    செக்ஸ் புகார் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உள்ளனர் . அவரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ஐ.ஜி.யிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் விசாகா கமிட்டி இறுதி முடிவு எடுக்கும்.

    இந்த தகவல்களை விசாரணை கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார். விசாகா கமிட்டி யாருக்கும் சாதக பாதகம் இன்றி நியாயமான முடிவை எடுக்கும் என்றும் அந்த உறுப்பினர் கூறினார். எனவே செக்ஸ் புகாருக்கு ஆளாகி இருக்கும் ஐ.ஜி. மீது துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா? என்ற பரபரப்பு தமிழக காவல்துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

    விசாக கமிட்டி விசாரணை நாளை தொடங்குவதையொட்டி பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த செக்ஸ் புகாரில் உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் செக்ஸ் புகார் சுமத்தப்பட்ட ஐ.ஜி. இடமாற்றம் செய்யப்படவில்லை. அவர் அதே பிரிவில் உள்ளார். #Vishakacommittee
    போலீஸ் ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த அதிகாரிகள் இருவரும் ஒரே துறையில் பணியாற்றினர். அப்போது ஐ.ஜி. அந்தஸ்தில் இருந்த அதிகாரி பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Vishakacommittee
    மத்திய பிரதேசத்தில் செக்ஸ் புகார் வாபஸ் பெற மறுப்பு தெரிவித்த தலித் மாணவி தலையின் மீது பாராங்கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சியோனியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த தலித் மாணவி படித்து வந்தார்.

    அந்த மாணவியின் ஊரைச்சேர்ந்த அணில் மிஸ்ரா (வயது 38) என்பவர் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மாணவி, அணில் மிஸ்ரா மீது போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரை வாபஸ் வாங்கும்படி மாணவியை அணில் மிஸ்ரா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் மாணவி அதை கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாணவி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். சியோனியில் பஸ் நிலையத்தில் இறங்கி கல்லூரிக்கு அவர் நடந்து சென்றார்.

    அப்போது அணில் மிஸ்ரா மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். மாணவி அருகே வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றார்.

    அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை தள்ளிவிட்டு விட்டு மாணவியை ரோட்டு ஓரமாக இழுத்து சென்று கீழே தள்ளினார். பின்னர் அங்கிருந்த பாராங்கல்லை எடுத்து மாணவியின் தலையில் தூக்கி போட்டார்.

    இதில் மாணவியின் தலை நசுங்கி ரத்தம் கொட்டியது. உடனே அணில் மிஸ்ரா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயத்துடன் கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அணில் மிஸ்ராவை தேடிவருகிறார்கள்.
    போலீஸ் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு செக்ஸ் புகார் அளித்துள்ளதால் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது உயர் ஆண் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த ஐ.ஜி. எந்தெந்த வகைகளில் எல்லாம் பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தமிழக காவல் துறைக்கு கரும் புள்ளியாக மாறியுள்ள இந்த பாலியல் துன்புறுத்தல் முயற்சி பற்றிய முழு விபரம் வருமாறு:-

    தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளில் சூப்பிரண்டு அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் துணை கமி‌ஷனராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார். ஒரே பிரிவில் இருப்பதால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் துணை சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு.

    நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதோடு ஐ.ஜி.யின் விருப்பத்தை நிராகரித்துள்ளார்.

    என்றாலும் ஐ.ஜி. தனது மனதை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    அதுபோல வழக்குகள் தொடர்பாக இருவரும் விவாதிக்கும்போது அந்த ஐ.ஜி. தனது செல்போனில் பதிவாகி உள்ள தகவல்களை காண்பித்து பேசுவாராம். அந்த தகவல்களை அவர் பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு பரிமாற்றம் செய்வதுண்டு. அந்த சமயத்தில் அவர் ஆட்சேபத்துக்குரிய படங்களையும் சேர்த்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக அதிகாலை நேரத்தில் அந்த அதிகாரி மோசமான படங்களை அனுப்பியதாக தெரிகிறது.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    இதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி ஐ.ஜி. தொடர்ந்து ஆபாச படத்தை காட்டியதாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடி பணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பெண் அதிகாரியிடம், “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலும் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார். அதோடு தனது பிரிவு உயர் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் ரீதியிலான துன்புறுத்தல் கொடுக்க முயன்றார் என்ற புகாரையும் அளித்தார்.

    அப்போது ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்றும் டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார். வழக்குகள் தொடர்பாக பேசிய போது ஆபாச படம் காட்டப்பட்டதையும் கூறினார்.

    மேலும் ஐ.ஜி. தனது செல்போனில் இருந்து அனுப்பிய ஆபாச படங்களையும் பெண் அதிகாரி ஆதாரத்துடன் காட்டி முறையிட்டார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க விசாகா கமிட்டி உள்ளது. தமிழக காவல் துறையில் விசாகா கமிட்டி உறுப்பினர்கள் ஓய்வு பெற்று விட்டதால், அந்த கமிட்டி செயல்படாமல் இருந்தது. தற்போது இந்த கமிட்டிக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டி கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உள்ளனர். இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும். விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்று காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு புதிய விதிமுறைகளை இயற்றியுள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    விசாகா கமிட்டி விதிகளின்படி, குற்றம் இருப்பதாக தெரிய வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பிரிவுகளின் கீழும் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

    இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஜி. மீதான புகார் காவல்துறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடமை தவறாத அந்த ஐ.ஜி. சென்னை காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். நல்ல அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.

    சென்னையில் துணை போலீஸ் கமி‌ஷனராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். வெளி மாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது பதவி உயர்வு பெற்று ஐ.ஜி.யாக உள்ளார்.

    அவர் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகார்கள் ஆச்சரியம் அளிப்பதாக சொல்கிறார்கள். #Vishakacommittee

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரி மீதான செக்ஸ் புகார் குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு அலுவலகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுகிழமை அத்தியாவசிய பணிக்காக பெண் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தார்.

    ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று அலுவலகத்தில் மற்ற பணியாளர்கள் யாரும் இல்லை. அந்த பெண் ஊழியரும் அவரது மேல் அதிகாரியும் மற்றும் சிலரும் மட்டுமே இருந்தனர்.

    அப்போது மேல் அதிகாரி, அந்த பெண் ஊழியரை அவரது அறைக்கு அழைத்து அவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது பற்றி நேற்று அந்த பெண் ஊழியர் கலெக்டர் அலுவலக உயர் அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார். இதையடுத்து பெண் ஊழியர் புகார் கூறிய அதிகாரியை அழைத்து உயர் அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்.

    அப்போது அந்த அதிகாரி தன் மீது வேண்டுமென்றே பெண் ஊழியர் புகார் கூறுவதாகவும், தனக்கும் இப்பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மறுத்தார்.

    எனவே இப்பிரச்சினை குறித்து விரிவான விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக புகார் கொடுத்தவர் மற்றும் புகார் கூறப்பட்டவர் ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க ஏற்பாடு நடந்தது.

    இந்நிலையில் பெண் ஊழியருக்கு ஆதரவாக அலுவலக ஊழியர்கள் இப்பிரச்சினையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் இப்பிரச்சினை குறித்து நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    அரியானா மாநிலத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தன்னை பலவந்தப்படுத்த முயற்சித்ததாக தலைமை செயலாளர் மீது புகார் கூறியுள்ளார்.
    சண்டிகார்:

    அரியானா மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வாகி அரியானா மாநில ஒதுக்கீட்டில் அதிகாரி ஆனார்.

    இவர், அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் மீது செக்ஸ் புகார் கூறி உள்ளார். இது சம்பந்தமாக அவர் ஜனாதிபதி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பி உள்ளார்.

    மேலும் இந்த புகார் பற்றிய விவரங்களை சமூக வலைத்தளம் மூலமும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அந்த அதிகாரி எவ்வாரெல்லாம் செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்ற விவரங்கள் உள்ளன. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மே 22-ந்தேதி நான் அனுப்பிய கோப்பில் சில எதிர்ப்பு கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தது பற்றி கூடுதல் தலைமை செயலாளர் என்னை அழைத்து மிரட்டல் விடுத்தார்.

    அப்போது செக்ஸ் ரீதியாக தனக்கு உடன்படவில்லை என்றால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்து விடுவேன் என்று கூறினார். மேலும் வருடாந்திர ரகசிய குறிப்பில் (ஏ.சி.ஆர்.) உன்னை பற்றி மோசமாக எழுதி உனது வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்று கூறினார்.

    ரோக்தக்கில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் கலந்து கொண்ட கூடுதல் தலைமை செயலாளர் சம்பந்தமே இல்லாமல் என்னை கட்டாயப்படுத்தி தன்னுடன் நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார்.

    கடந்த 6-ந்தேதி தனது அறைக்கு அழைத்து மாலை 7.39 மணி வரை கட்டாயமாக அமர வைத்தார். நான் அவரது மேஜைக்கு எதிர்த்த நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என்னை தன் அருகே வந்து அமரும்படி கூறினார். நான் அவர் அருகே சென்றேன். எனக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுப்பது போல் பாசாங்கு செய்து தவறாக நடக்க முயன்றார். கோப்பில் உள்ள பேப்பர்களை என் அருகே போட்டு விட்டு எடுப்பது போல் நடித்து தவறான செயலில் ஈடுபட்டார்.

    அவரது செயல்பாடுகள் பற்றி நான் மற்ற உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்களும் என்னை மிரட்டுவது போல் நடந்து கொண்டார்கள். எனது மூத்த பெண் அதிகாரி ஒருவர் எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விலக்கி விடுவோம் என்று மிரட்டினார்.

    இவ்வாறு அந்த பெண் அதிகாரி புகாரில் கூறி உள்ளார்.
    ×